Site icon Tamil News

லிபியாவில் குவிந்து கிடக்கும் சடலங்கள் – அடையாளம் காண முடியாமல் திணறல்

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 11,300 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் சடலங்கள் குவிந்து கிடப்பதாக தெரியவந்துளளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவர் ஒருவர் உயிரிழந்தவர்களின் வயது, பாலினம் ஆகியவை முதலில் கண்டறியப்படும் என்றார்.

கறுப்பு நிறப் பிளாஸ்டிக் பையில் இருந்த சடலத்தை அவர் சோதனையிட்டார். அந்த நபரின் உடல் ஒரு வாரமாகக் கடலில் இருந்ததால் அவரை அடையாளம் காண இயலவில்லை என்று மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த கட்டமாக மரபணுச் சோதனை நடத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை அவரது குடும்பத்தினர் உயிருடன் இருந்து அவரது சடலத்தைப் பெற முன்வந்தால் அது முக்கியம் என்று மருத்துவர் தெரிவித்தார்.

 

Exit mobile version