Site icon Tamil News

இராணுவத்தை பலப்படுத்தும் ரஷ்யா : புட்டின் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை!

உக்ரைன் – ரஷ்யா இடையில் இடம்பெற்றுவரும் போரானது  இரண்டு வருடங்களை நெருங்கும் நிலையில்,  தற்போதைய குளிரான காலநிலையில், தாக்குதல்கள் உச்சம் தொடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்  நாட்டின் ஆயுதபடைகளை  விரிவுபடுத்துவதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்.

இது குறித்து கிரெம்ளின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆணையின்படி மொத்த ஆயுதப்படைகளின் எண்ணிக்கை 2.2 மில்லியனாக அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார். அவர்களில் 1.3 மில்லியன் பேர் படைவீரர்களாக இருப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைனில் நடந்து வரும் போர் மற்றும் வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் “விரிவாக்கம்” காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

Exit mobile version