Tamil News

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா தயார் – பிரித்தானியாவின் ரஷ்ய தூதர்

ரஷ்யா உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறது, ஆனால் அதனை உக்ரைன் விரும்பவில்லை என்று, பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவிற்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கெலின், கடந்த மே 28ம் திகதி பிபிசிக்கு அளித்த பேட்டியில், உக்ரைன் போரில் ரஷ்யாவின் நிலைப்பாட்டை பற்றி பேசியுள்ளார்.அதில் ‘ரஷ்யா உக்ரைனுடனான போரில் அமைதியை விரும்புகிறது, ஆனால் சில நிபந்தனைகள் உள்ளது, முதலாவதாக உக்ரைனிலிருந்து ரஷ்யாவிற்கு எந்த அச்சுறுத்தலும் வரக்கூடாது.

இரண்டாவதாக உக்ரைனில் ரஷ்யர்களை மோசமாக நடத்துகிறார்கள், குறிப்பாக பெல்ஜியத்தில் பிரெஞ்சு மக்கள் நடத்தப்படுவது போல அல்லது இத்தாலியர்கள் மற்றும் ஜேர்மனியர்கள் சுவிட்சர்லாந்தில் நடத்தப்படுவது போல் நடத்துகிறார்கள்’ என குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் ‘இது மனித உரிமைகள் பிரகடனம் மற்றும் அனைத்து ஆவணங்களின் கடுமையான மீறல்’ என்று கெலின் கூறியுள்ளார்.

War in Ukraine may get 'new dimension,' Russian ambassador warns

இதனை தொடர்ந்து சமீபத்திய ஆண்டுகளில் உக்ரைனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை, அவர் தீவிர தேசியவாதம் என்று கடுமையாக சாடியுள்ளார்.மேலும் கெலினின் கூற்றுப்படி, ரஷ்யாவின் தற்போதைய இராணுவ நோக்கம் ரஷ்யாவின் டான்பாஸ் பகுதியை, ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பதே என கூறியவர், உக்ரைன் பாரிய இலட்சியவாத தவறு செய்து கொண்டிருக்கிறது என எச்சரித்துள்ளார்.

உக்ரைன் தரப்பு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருந்தால், ரஷ்யா நாளையே சமாதானம் செய்து கொள்ள தயாராக இருக்கிறது. ஆனால் இந்த நேரத்தில் அதற்கான முன் நிபந்தனைகள் இல்லை, ஏனெனில் உக்ரைன் ஜனாதிபதி ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையையும் தடைசெய்துள்ளார்’ என்று ரஷ்ய தூதர் கூறுகிறார்.மேலும் ’போரை நிறுத்துவது ஒரு நல்ல யோசனை என்று நான் நம்பவில்லை, ஐரோப்பாவில் நிலையான மற்றும் நீண்ட கால அமைதிக்கு அது தீர்வாகாது” என்று கெலின் பிபிசிக்கு அளித்த பேட்டியில் விளக்கியுள்ளார்.

Exit mobile version