Site icon Tamil News

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட நான்கு உக்ரைன் பிராந்தியங்களில் ரஷ்யா அதிபர் தேர்தல் உறுதி

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட நான்கு உக்ரைன் பிராந்தியங்களில் ரஷ்யா தனது ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் என்று நாட்டின் மத்திய தேர்தல் ஆணையத்தை மேற்கோள்காட்டி Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரேனிய பிராந்தியங்களான டோனெட்ஸ்க் , லுஹான்ஸ்க் , சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய பகுதிகளை ரஷ்யா கடந்த ஆண்டு தன்னுடன் இணைத்துக்கொண்டதாகக் அறிவித்தது.

இதற்கிடையில், உக்ரைன் ஏற்கனவே பிராந்தியங்களில் எந்தவொரு ரஷ்ய வாக்கும் செல்லாது என்றும், வாக்களிப்பைக் கண்காணிக்க அனுப்பப்படும் பார்வையாளர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்றும் கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உக்ரைன் மற்றும் பெரும்பாலான நாடுகளால் ரஷ்யாவின் இணைப்புக் கோரிக்கை சட்டவிரோதமானது என நிராகரிக்கப்பட்டது. மாஸ்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் இராணுவச் சட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த வெள்ளியன்று, உக்ரைனில் சண்டையிட்ட ரஷ்ய வீரர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், மார்ச் தேர்தலில் ஜனாதிபதியாக மீண்டும் போட்டியிடுவார் என்று உறுதிப்படுத்தினார்,

Exit mobile version