Site icon Tamil News

கிரிக்கெட்டரான பிறகும் தொழிலைக் கைவிடாத ரிங்குவின் தந்தை!

இந்திய நட்சத்திர வீரரான ரிங்கு சிங்குவின் தந்தை கான்சந்திர சிங் அலிகாரின் சிலிண்டர் டெலிவெரி செய்யும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரிங்கு சிங்கின் சிறு வயதிலிருந்தே அவரின் தந்தை சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார்.

குடும்பம் மிகவும் கஷ்டத்தில் இருந்த சமையங்களில் இந்த தொழிலே அவர்களுக்கு கைக்கொடுத்தது. அதேபோல் ரிங்குவும் படித்துக்கொண்டும் கிரிக்கெட் பயிற்சி செய்துவிட்டும் அவரின் தந்தைக்கு சிலிண்டர் டெலிவரி செய்ய உதவி செய்தார்.

ரிங்கு படித்துக் கொண்டிருக்கும்போது குடும்ப சூழல் சரியில்லாததால் ரிங்குவை வேலைக்கு செல்ல சொல்லியும் விளையாட்டை விடும்படியும் அவரின் தந்தை கூறினார்.

ஆனால் வீட்டுக்கு தெரியாமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ரிங்கு சிங் ஒரு போட்டியில் வெற்றிபெற்று பரிசாக சைக்கிள் வாங்கி வந்து தனது தந்தையிடம் கொடுத்தார்.

அதுவரை வாடகை சைக்கிள் மூலமே டெலிவரி செய்த அவரின் தந்தைப் பிற்பாடு சொந்த சைக்கிளில் டெலிவரி செய்ய ஆரம்பித்தார். இதுவே அவரின் தந்தை ரிங்குவை கிரிக்கெட்டில் அனுமதிக்க முதல் காரணமானது.

Exit mobile version