Tamil News

“இதுபோதும் தல” முழு உலகமே கொண்டாடிய மகத்தான வெற்றி… நெகிழ்ச்சியான நிமிடங்களின் தொகுப்பு…..

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியை நேரில் காண ஏராளமான கோலிவுட் பிரபலங்கள் சென்றிருந்தனர்.

மழை குறுக்கிட்ட காரணத்தினால் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக இறுதிப்போட்டி மூன்று தினங்களாக நடந்துள்ளது.

இம்முறை கடைசி 2 பந்தில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற இக்கட்டான சூழ்நிலையில் இருந்த சென்னை அணிக்கு, சூப்பர் ஹீரோ போல் வந்து சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி வெற்றிக்கு வித்திட்டார் ஜடேஜா.

இதன்மூலம் 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை தட்டிச் சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ். சிஎஸ்கே அணியின் இந்த வெற்றியை உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திரசிங் தோனி கண்ணீர் விட்டழுத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

இந்த வெற்றியால் எமோஷனலான தோனி, ஜடேஜாவை தூக்கி கொண்டாடிய போது கேப்டன் தோனியின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற போது கூட தோனி, பெரிதாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டதில்லை.

எப்போதும் நிதானம் காக்கும் தோனி, அந்த நேரத்தில் பரபரப்பானது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றிகரமாக வலம் வருவதற்கு காரணம் என்ன என்று பல வீரர்களிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே பதில் சிஎஸ்கே ஒரு அணி அல்ல அது குடும்பம் என்று தான் கூறுவார்கள்.

மற்ற அணியில் சொதப்பிய வீரர்கள் எல்லாம் சிஎஸ்கேவுக்கு வந்த பிறகு சிறப்பாக விளையாடுவதற்கு காரணமும் இங்கு கிடைக்கும் மரியாதை தான்.

திறமை இருந்தும் பெரிய அளவில் சர்வதேச அளவில் சாதிக்க முடியாமல் போன ராயுடு ஐபிஎல் வரலாற்றில் ஆறு கோப்பையை வென்ற வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.இந்த நிலையில் இறுதி போட்டியுடன் தான் ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்திருந்தார். நேற்று ஆட்டத்தில் கூட ராயுடு 8 பந்துகளில் 19 ரன்கள் விளாசினார்.

இதில் இரண்டு சிக்சர்களும், ஒரு பவுண்டரியும் அடங்கும். இதன் மூலம் ஆட்டம் சிஎஸ்கேவின் பக்கத்திற்கு மாறியது. இதனை அடுத்து கோப்பையை வழங்கும் போது தோனி ஜடேஜாவையும் ராய்டுவையும் வந்து கோப்பையை வாங்க சொன்னார். இதனை அடுத்து இடது புறம் நிற்க ஜடேஜா வலது புறம் நிற்க நாயுடு நடுவில் கோப்பையை வாங்கினார்.

இதை அடுத்து மற்ற வீரர்கள் அனைவரும் மேடைக்கு வந்து உற்சாகமாக வெற்றியை கொண்டாடினார்கள். இதனை அடுத்து வழக்கம் போல் சிஎஸ்கே வின் இளம் வீரர்களிடம் கோப்பை சென்றது.

அதன் பிறகு வீரர்கள் தங்களது குழந்தைகளை வரவழைத்து அவர்களிடம் கோப்பையை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தோனியின் மகள் ,ஜடேஜாவின் மகள், ரகானேவின் மகள், மோயின் அலி மகன் என அனைவரும் கோப்பையுடன் நின்று தங்களது தந்தைகளின் வெற்றியை கொண்டாடினார்கள்.

அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் தனது எதிர்கால மனைவிடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

Exit mobile version