Site icon Tamil News

மேலும் ஒரு சாதனை.. சச்சினை பின்னுக்குத் தள்ளிய கோலி..!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்து தொடர் ஆட்டநாயகன் விருதை கோலி வென்றார்.

கோலி 11 இன்னிங்ஸ்களில் 95.62 சராசரியுடன் 765 ரன்கள் எடுத்தார். இதுவரை உலகக்கோப்பையில் எந்த வீரரும் 700 ரன்களை கடந்தது இல்லை.

கடந்த 2003 -ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் 673 ரன்கள் அடித்து இருந்திருந்தது அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்த உலகக்கோப்பையை சிறப்பாக தொடங்கிய விராட் கோலி 765 ரன்கள் எடுத்து அந்த சாதனையையும் முறியடித்தார்.

கோலி நடந்து முடிந்த உலகக்கோப்பையில் 11 போட்டிகளில் 9 முறை 50 பிளஸ் ரன்களை எடுத்தார். அதே நேரத்தில், அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக தனது 50-வது ஒருநாள் சதத்தை அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் கோலி படைத்தார்.

இந்த சாதனை மூலம் சச்சின் சாதனையை கோலி முறியடித்தார். இந்நிலையில், மீண்டும் சச்சின் சாதனையை விராட் முறியடித்து சச்சினை பின்னுக்கு தள்ளினார். சச்சின் இதுவரை சர்வதேச போட்டிகளில் 20 முறை தொடர் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆனால் கோலி நேற்று தொடர் ஆட்டநாயகன் விருது வென்றது மூலம் சச்சின் சாதனையை முறியடித்தார்.

தொடர் ஆட்டநாயகன் விருது:

விராட் கோலி கடந்த 2008 முதல் 2023 வரை மொத்தமாக சர்வதேச போட்டிகளில் 21 முறை தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். அதில் மூன்று முறை டெஸ்ட் போட்டியிலும், 11 முறை ஒருநாள் போட்டியிலும், ஏழு முறை டி20 போட்டியில் பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 1989 முதல் 2013 வரை 20 முறை சர்வதேச போட்டிகளில் தொடர் ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்.

அதில் ஐந்து முறை டெஸ்ட் போட்டியிலும், 15 முறை ஒருநாள் போட்டியிலும் பெற்றுள்ளார்.

Exit mobile version