Tamil News

இலங்கை: மோட்டார் போக்குவரத்து பொலிஸாரின் மாதாந்த கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு

போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கான வெகுமதிகளை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

13 வருட காலப்பகுதியின் பின்னர் இந்த அதிகரிப்பு வழங்கப்படுவதாகவும், இது மாதாந்த அடிப்படையில் வழங்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் மாதாந்த கொடுப்பனவு 1800 ரூபாவிலிருந்து 6000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

பரிசோதகர் தர உத்தியோகத்தர் ஒருவரின் மாதாந்தக் கொடுப்பனவு 2000 ரூபாவிலிருந்து 7000 ரூபாவாகவும், மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஒருவரின் கொடுப்பனவு 2500 ரூபாவிலிருந்து 7000 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஊக்கப்படுத்தி சிறந்த சேவையை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு மாதாந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version