Site icon Tamil News

கடன் மறுசீரமைப்பு பணக்காரர்களையும் பாதிக்கும் வகையில் இருக்க வேண்டும் – ஹர்ஷ டி சில்வா

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு சாதாரண உழைக்கும் மக்களை மட்டுமல்ல, பணக்காரர்களையும் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொது நிதி தொடர்பான குழுவின் (CoPF) தலைவர்,  ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு மூலோபாயத்தை அரசாங்கம் செய்யத் தவறியதால் எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்,

“உதாரணமாக, EPF-ல் இருந்து பணம் செலவழிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு 100 பேரை அழைக்க வேண்டியிருந்தால், இப்போது அவர் 100 பேருக்கு பதிலாக 50 பேரை மட்டுமே அழைக்க முடியும். அதுதான் உண்மை” எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்த சுமையை உழைக்கும் மக்கள் மட்டுமின்றி பணக்காரர்கள் மற்றும் வங்கி உரிமையாளர்களும் சுமக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version