Site icon Tamil News

இலங்கையில் ஆபத்தாக மாறும் சுவாச நோய்கள் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

சுவாச நோய்கள் மற்றும் நிமோனியா காரணமாக மருத்துவமனைகளில் இறப்பு எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்தால், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற சுவாச ஆரோக்கியம் தொடர்பான உலகளாவிய ஆராய்ச்சிப் பிரிவின் வருடாந்த விஞ்ஞானக் கூட்டத்தில் இது தெரியவந்துள்ளது.

2017ஆம் ஆண்டு இலங்கை வைத்தியசாலைகளில் உயிரிழந்தவர்களில் 18 வீதமானவர்கள் சுவாச நோய்களினால் உயிரிழந்துள்ளனர்.

காற்றின் தரம் குறைதல், கிராமப்புறப் பெண்கள் சமையல் புகை, புகைப்பிடித்தல் போன்றவை சுவாச நோய்களுக்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version