Site icon Tamil News

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காப்புறுதி செய்வதில் நடக்கும் மோசடி

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சட்டவிரோத காப்புறுதி மற்றும் ஆட்கடத்தல்கள் இலங்கையில் சில அரசியல்வாதிகளின் ஆதரவுடன் செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

குவைத்தில் பணிபுரியும் பெருமளவிலான இலங்கைத் தொழிலாளர்கள் இந்தக் கடத்தலில் சிக்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இந்நிலைமையை தடுக்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு காப்புறுதி முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

எந்தவொரு நாட்டிற்கும் தொழிலாளியாக வெளிநாடு செல்லும் போது அந்த காப்புறுதியின் மூலம் காப்புறுதித் தொகையை பெற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிடுகின்றார்.

காப்புறுதி அமைப்பில் 3731 தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version