Site icon Tamil News

ராஷ்மிகா மந்தனாவின் சர்ச்சை வீடியோ – ஆபத்தாக மாறும் Deepfake

நடிகை ராஷ்மிகா மந்தனா லிஃப்டில் நுழைவதைக் காட்டும் வீடியோ இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆரம்பத்தில் உண்மையானதாகத் தோன்றுவது, உண்மையில், நடிகையின் ‘Deepfake’ ஆகும். அசல் வீடியோவில் ஜாரா பட்டேல் என்ற பிரிட்டிஷ் இந்தியப் பெண் இடம்பெற்றுள்ளார், அதற்குப் பதிலாக ராஷ்மிகா மந்தனாவின் முகம் Deepfake மூலம் மார்பிங் செய்யப்பட்டது.

Deepfake தொழில்நுட்பம் என்றால் என்ன?

Deepfake என்பது 21 ஆம் நூற்றாண்டின் போட்டோஷாப் போன்ற மென்பொருளாகும். Deep learning எனப்படும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இது செய்யப்படுகிறது, ஏற்கனவே உள்ள மூல உள்ளடக்கத்தை மாற்றி இது போலி நிகழ்வுகளின் படங்களை உருவாக்குகிறது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் தொடர்ந்து உருவாகி வரும் எதிர்மறையான தளங்களில் Butis ஒன்றாகும். குரல்களை மாற்றி வேறொருவரைப் பிரதிபலிக்கும் திறன் கொண்ட சைபர் கும்பலால் இந்த தளம் இயக்கப்படுகிறது.

இது எப்போது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது?

Deepfake பல்வேறு வகையான வீடியோக்களில் மனிதர்களின் குரல்கள் மற்றும் முகங்களை மாற்றியமைக்கிறது.

இது முதன்முதலில் 2017இல் Reddit இல் அறிமுகப்படுத்தப்பட்டது. கேல் கடோட், ஸ்கார்லெட் ஜோஹன்சன், டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் பல பிரபலங்களின் முகங்களை Deepfake முறையில் மாற்றி ஆபாச படங்கள் உலாவ விடப்பட்டது. deep learning வழிமுறைகளைப் பயன்படுத்தும் இயந்திரத்தின் உதவியுடன் முகம் மாற்றப்படுகிறது. Encoder எனப்படும் AI அல்காரிதத்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மனித முகம் உள்ள புகைப்படங்களை ஸ்கேன் செய்து இந்த முக மாற்றங்களை செய்கிறார்கள்.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்பதை நினைவில் கொண்டு இணையத்தில் உலாவரும் செய்திகளை பரிசீலிக்கவும்!

நன்றி – கல்கி

Exit mobile version