Site icon Tamil News

மாற்றுச் சர்க்கரையால் ஆபத்து – உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கை

உணவில் மாற்றுச் சர்க்கரையைச் சேர்த்துக்கொள்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது நீண்டகால அடிப்படையில் நீரிழிவு நோய், இருதய நோய் ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கலாம். மரணமடையும் சாத்தியமும் அதிகரிக்கலாம் என புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

மாற்றுச் சர்க்கரையைப் பயன்படுத்துவது உடல் கொழுப்பைக் குறைக்க உதவாமலும் போகலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வு, 283 வெவ்வேறு ஆய்வுகளை ஆராய்ந்த பிறகு முடிவுகளை வெளியிட்டது. முடிவுகளின் அடிப்படையில் உலகச் சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டிகளை வரைந்துள்ளது.

உடல் எடையைக் குறைக்கவோ, நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவோ மாற்றுச் சர்க்கரையைப் பயன்படுத்த வேண்டாம் என்று நிறுவனம் பரிந்துரைக்கிறது.

மாற்றுச் சர்க்கரை வகைகளில் acesulfame K, aspartame, advantame, cyclamates, neotame, saccharin, sucralose, stevia போன்றவை அடங்கும்.

குறுகிய காலத்தில் எடை குறைந்தாலும் அது நீண்ட காலம் நிலைக்காது என்று நிறுவனத்தின் ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் தெரிவித்தார்.

சர்க்கரை உட்கொள்வதைக் குறைக்க எண்ணுவோர் மாற்று வழிகளை நாடும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவர்கள் உணவில் இயல்பாகவே சர்க்கரை இருக்கும் உணவு வகைகளையும் இனிப்பு சேர்க்கப்படாத உணவு, பானங்களையும் பரிசீலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

இருப்பினும் ஆய்வில் பங்கேற்றவர்களின் உடல்நிலையால் முடிவுகள் வித்தியாசமாக பதிவாகியிருக்கலாம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.

Exit mobile version