Site icon Tamil News

பொதுச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் – இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழுள்ள வணிக செயலகத்தின் பொதுச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த அலுவலகம் தற்போது கொள்ளுப்பிட்டி அனகாரிக தர்மபால மாவத்தையில்  தற்காலிகமாக இயங்கி வருகின்றது. இதனை கொழும்பு 10 மருதானை வீதி, 79 டெக்னில் சந்தியில் அமைந்துள்ள வளாகத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஜூலை 28 முதல் ஜூலை 31 வரை பொதுமக்களுக்கான சாதாரண சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், அவசரகால சேவைகள் ஆன்லைனில் பராமரிக்கப்படுகின்றன, அதற்காக பின்வரும் மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தலாம்.

http://dgms@sltnet.lk

http://dmsmos@slt.lk

http://shippingooffice@slt.lk

070 110 7788 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமும் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

Exit mobile version