Site icon Tamil News

IMF இன் 02ஆம் தவணை கடனை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள்!

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் செயற்குழுவால் எட்ட முடியாத பிரச்சினைகளில் ஒன்று வரி அறவீடு வலையமைப்பு சாத்தியமற்றது என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று (30.09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது, ​​நாங்கள் பல ஒப்பந்தங்களை எட்டியுள்ளோம். அடுத்த சில வாரங்களில் அந்த ஒப்பந்தங்களை எட்ட முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

இரண்டாவது தவணையை பெறுவது நமது பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. வரி வசூலிக்க வேண்டும். வரி வசூலிக்கும் வலையமைப்பை விரிவுபடுத்த வேண்டும்.  வரி கட்டுபவர்கள் இன்று அதிக வரி செலுத்துகிறார்கள். நாங்கள் மட்டும் ஏன் கட்டுகிறோம்… மற்றவர்கள் ஏன் செலுத்தவில்லை என்று கேட்கிறார்கள். இது நியாயமான கேள்வி” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version