Tamil News

மன்னார் – மடு ஆவணித் திருவிழாவில் பங்கேற்ற ஜனாதிபதி

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது.மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் திகதி இடம்பெறுகிறது.

இம்முறை ஆவணி மாத திருவிழா திருப்பலி பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதி பேராயர் பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை,அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை,காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, கொழும்பு மறைமாவட்ட ஆயர் மெக்ஸ்வேல் சில்வா ஆண்டகை ஆகியோர் ஆயர்கள் திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

மடு திருவிழா திருப்பலியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்றது. குறித்த திருவிழா திருப்பலியில் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் பி.கிறிஸ்து நாயகம் அடிகளார், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரமுகர்கள் என பல்வைறு தரப்பினர் வங்கேற்றுள்ளனர்.

இந்த திருவிழா திருப்பலியில் நாட்டின் அனைத்து பகுதிகளையும் சேர்ந்த சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மடு திருத்தலத்திற்கு விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version