Tamil News

உலகெங்கும் வாழும் 91 அணி நண்பர்களின் ஒன்றுகூடல்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்ற க.பொ.த. உ.த. 1991 அணியினர் சனிக்கிழமை 05/08/2023 மாலை யாழ்ப்பாணம் வலம்புரி விருந்தகத்தில் “சங்கமம்” என்ற பெயரில் மாபெரும் ஒன்றுகூடல் ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.

மிகவும் கடினமான காலத்தில் யாழ்ப்பாணத்தில் கல்வி கற்ற பலர் பல்வேறு காரணங்களால் உலகம் முழுதும் பரவி வாழ்கின்றனர். அவர்களை முகநூல், வட்ஸ்அப் குழுமம் ஒன்றினூடாக இணைக்கும் முயற்சிகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம், முதலிய நாடுகளில் AL 1991 அணியைச் சேர்ந்த இல்ஙகை தமிழ் மாணவர்களை உள்வாங்கி மாபெரும் ஒன்றுகூடல்கள் நடைபெற்றது. நண்பர்களின் பொன்அகவை விழா ஆஸ்திரேலியாவிலும், மகிழம் கனடாவிலும், பொன்மகிழவிழா (PMV) லண்டனிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது.

20 இற்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து பங்குபற்றிய 91 அணியினர் வெகுவிமர்சையாக தமது அணியின் 50 வது அகவையை 2022 இல் கொண்டாடியருந்தனர்.

இறுதியாக இலங்கையில் சங்கமம் எனும் நிகழ்வை 4 நாள் நிகழ்வாக இவ்வாண்டு 3-6 ஆகஸ்ட் 2023 கொண்டாடினர். ஆண், பெண் இருபாலாரையும் இணைத்து ஒன்றுகூடல்கள் நடத்தப்பட்டன. பள்ளிகடந்த நட்புக்கு பாதை வகுத்த சமுகவலைத்நலங்கள் குழுமங்கள் இந்த ஒழுங்குகளை செய்தருந்தனர்.

இலங்கையில் முதன்முறையாக 03/08/2023 இல் கொழும்பிலும், 5-06/08/2023 இல் யாழ்ப்பாணத்திலும் பள்ளிகடந்த நட்பை வெளிப்படுத்தும் ஒன்றுகூடல்களை 91ம் ஆண்டு அணியினர் நடாத்தியிருந்தனர்.

இதுவரை காலங்களில் ஒரே பாடசாலையைச் சேர்ந்த பழைய மாணவர்கள் ஒன்றுகூடல்களை நடாத்துவதே வழக்கமாக உள்ள நிலையில் முதன்முறையாக AL 1991 அணியினர் ஏறத்தாழ 20 பாடசாலைகளைச் சேர்ந்த 250 பேரைக் கொண்டு ஒன்றுகூடலை யாழ்ப்பாணத்தில் நடத்தியுள்ளனர். சங்கமம் நகழ்வு நான்கு நாட்களாக இனிதே நடந்தேறியது.

3/8/2023- கொழும்பு சினமன் லேக் விடுதி
4/8/2023- கொழும்பு – யாழ்ப்பாணம் கோச் பயணம்
5/6/2023- யாழ்ப்பாணம் வலம்புரி விடுதி
6/8/2023- அல்லை கடல்கரை விடுதி என பல நண்பர்களை உள்வாங்கி வெகுசிறப்பாக நடந்தறயத

புலம் பெயர்ந்து வாழ்கின்ற AL 1991 அணியினரில் ஏறத்தாழ 60 பேர் 10 க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து இலங்கை வந்திருந்தனர். இலங்கையின் பல பாகங்களிலும் வாழும் AL 1991 அணியினரில் பலரும் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

நண்பர்களும் நண்பிகளும் ஏற்கனவே சமூக வலைத்தளங்களின் ஊடாக கதைத்துக் கொண்டாலும் நீண்ட காலத்தின் பின் நேராக சந்தித்து உரையாடியது உணர்வு பூர்வமாக இருந்தது. இலங்கையில் இருப்பவர்களில் தொழில் நிமித்தம் சந்தித்துக் கொண்டவர்கள் கூட அதிகார தோரணை இல்லாமல் ஒரே அணியில் படித்தவர்கள் என நட்புடன் உரையாடி மகிழ்ந்தனர்.

நிகழ்வில் கலந்து கொண்ட பலரும் பல்வேறு கலைத் திறமைகளை வெளிப்படுத்தி சபையை மகிழ்வித்தனர். நட்பினைத் தொடரவும் நட்பினால் பயன் அடையவும்  “சங்கமம்” சிறப்பான தளத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version