Tamil News

சுருண்டு விழுந்த நபரை கேலி செய்த போலிஸ் ;370 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் பொலிஸ் வாகனத்தில் சிறைக்கு செல்லும் வழியில் நபர் ஒருவர் சுருண்டு விழுந்து காயமடைந்த சம்பவத்தில் மாகாண நிர்வாகம் 371 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

குறித்த நபர் சுருண்டு விழுந்ததும், உதவ முன்வராத பொலிஸார், அவரை கிண்டல் செய்ததுடன், காயம் பட்டதாக நடிப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்த நிலையில் தற்போது Randy Cox என்ற 36 வயது நபருக்கு கனெக்டிகட் மாகாண நிர்வாகம் 45 மில்லியன் டொலர் (ரூ.371 கோடி) இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.சம்பவத்தின் போது அவர் இருக்கைப் பட்டை அணிந்திருக்கவில்லை எனவும், பொலிஸ் வாகனத்தில் அவர் சிறைக்கு கொண்டுசெல்லப்படும் போது இச்சம்பவம் நடந்துள்ளது எனவும் கூறுகின்றனர்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் தற்போது நகர தலைவரும் சட்டத்தரணிகளும் கலந்தாலோசித்து இழப்பீடு வழங்கும் முடிவுக்கு வந்துள்ளனர். வெள்ளிக்கிழமை ஒரு பகல் முழுவதும் முன்னெடுக்கப்பட்ட பலகட்ட ஆலோசனைகளுக்கு முடிவில், மதியத்திற்கு மேல் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளதை அறிவித்துள்ளனர்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இரு பொலிஸ் அதிகாரிகளை ஏற்கனவே நகர நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியிருந்தது. மட்டுமின்றி, இது நகர நிர்வாகத்தின் தவறு எனவும் Randy Cox தரப்பு சட்டத்தரணிகள் அறிக்கையூடாக வெளிப்படுத்தியிருந்தனர்.

2022 ஜூன் 19ம் திகதி தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. பொலிஸ் வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட Randy Cox, திடீரென்று வாகனம் நிறுத்தப்பட்டதில் தலையில் காயம் பட்டு அப்படியே சுருண்டு விழுந்தார்.அவருக்கு அப்போது கைவிலங்கு போடப்பட்டிருந்ததால், சுதாரித்து தப்ப முடியாமல் போனது. மட்டுமின்றி இருக்கை பட்டையும் அந்த வாகனத்தில் இல்லை என்றே தெரியவந்தது.

பொலிஸ் வாகனத்தினுள் சுருண்டு விழுந்த நபர்: 370 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு | Man Paralyzed Police Van Wins Million Settlement

பெண் ஒருவரை துப்பாக்கியால் மிரட்டிய குற்றத்திற்க்காகவே Randy Cox கைது செய்யப்பட்டிருந்தார். தொடர்புடைய வழக்கு பின்னர் ரத்து செய்யப்பட்டது. தலையில் காயத்துடன் உதவி வேண்டும் என கோரிய Randy Cox பொலிரால் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானார்.

மது போதையில் உளறுவதாகவும், காயம் பட்டதாக நடிப்பதாகவும் ஏளனம் செய்துள்ளனர். இறுதியில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், George Floyd குடும்பம் சார்பில் வாதாடிய சட்டத்தரணி Ben Crump, இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என குறிப்பிட்டு, தொடர்புடைய பொலிஸார் மீது 100 மில்லியன் டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர இருப்பதாக அறிவித்தார்.அந்த விபத்திற்கு பின்னர் Randy Cox பல கட்ட அறுவை சிகிச்சைக்கு உள்ளானார். மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் இந்த வழக்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

Exit mobile version