Site icon Tamil News

பிலிப்பீன்ஸில் வீடுகளிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்!

பிலிப்பீன்ஸில் வீடுகளிலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்

பிலிப்பீன்ஸில் நூற்றுக்கணக்கானோர் வீடுகளைவிட்டு இன்று வெறியேறியுள்ளனர்.

எரிமலையிலிருந்து நச்சு வாயுக்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Kanlaon எரிமலை வெடிக்கும் அபாயம் குறித்து நிபுணர்கள் எச்சரித்தனர்.

எரிமலையைச் சுற்றி நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த 300 பேர் முன்னெச்சரிக்கையாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் அரசாங்கம் கூறியது.

எரிமலையிலிருந்து தொலைவில் உள்ள பள்ளிகள், சமூக மன்றங்களில் அவர்கள் தஞ்சமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

எரிமலைக்கு அருகில் வசித்தவர்கள் கந்தகத்தின் வலுவான மணம் குறித்துப் புகார் அளித்தனர்.

பள்ளி வகுப்புகள் ரத்துச் செய்யப்பட்டன. சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டன. Kanlaon எரிமலை கடந்த 9 ஆண்டில் 15 முறை வெடித்திருக்கிறது.

Exit mobile version