Site icon Tamil News

மெக்ஸிகோ எல்லையில் திரண்ட பெருமளவான புலம்பெயர்ந்தோர்!

இவ்வருடம் நிறைவுறுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பெருமளவிலான புகலிடக்கோரிக்கையாளர்கள் மெக்ஸிகோ எல்லைப் பகுதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று (23.12) 600 க்கும் மேற்பட்ட மக்கள், பெரும்பாலும் வெனிசுலா மற்றும் ஹோண்டுராஸைச் சேர்ந்தவர்கள், ஈகிள் பாஸ், டெக்ஸில் மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசித்துள்ளதாக கூறப்படுகிறது. இது வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்வோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் அடுத்த வருடத்தில் (2024) அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலின்போது சட்டவிரோத புலம்பெயர்வோரை கட்டுப்படுத்துவது முக்கிய தேர்தல் வாக்குறுதியாக பார்க்கப்படுகிறது.

Exit mobile version