Site icon Tamil News

இரகசிய ஆவணங்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க பென்டகன் திட்டம்!

மாசசூசெட்ஸ் ஏர் நேஷனல் காவலர் தளத்தில் இரகசிய ஆவணங்கள் கசிந்ததை அடுத்து, பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரகசிய தகவல்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க பென்கடகன் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,  இரகசியத் தகவல்கள் சேமிக்கப்பட்டு அணுகப்படும் துறையின் அனைத்து பாதுகாப்பான அறைகளையும் மேற்பார்வையிட்டு,  கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

புதிய உத்தரவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர், தொழிலாளர்கள் என்ன செய்கிறார்கள் மற்றும் அவர்கள் என்ன தகவல்களை அணுகுகிறார்கள் என்பதை சிறப்பாகக் கண்காணிக்கக்கூடிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொறுப்புக்கூறலை அதிகரிக்க திணைக்களம் முயற்சிப்பதாகக் கூறினார்.

அண்மையில் டீக்ஸீரா என்ற 21 வயது இளைஞர் அமெரிக்காவின் இரகசிய ஆவணங்களை கசிய விட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த பென்டகன் நடவடிக்கை எடுத்துள்ளது.

Exit mobile version