Site icon Tamil News

எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியது இந்த நாடுதான்: பிரான்ஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு

ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவிற்கு எரிவாயு கொண்டுசெல்லும் எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியது அமெரிக்காதான் என பிரான்ஸ் தரப்பிலிருந்து ஒரு பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், ரஷ்யாவிலிருந்து ஜேர்மனி முதலான ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு கொண்டு செல்லும் Nord Stream 1 மற்றும் 2 என்னும் இரண்டு எரிவாயுக் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டன.இந்நிலையில், அந்த எரிவாயுக் குழாய்களை சேதப்படுத்தியது அமெரிக்காதான் என பிரான்ஸ் வலதுசாரிக் கட்சியான The Patriots கட்சியின் தலைவரான Florian Philippot பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

உக்ரைன் போர் துவங்குவதற்கு பல ஆண்டுகள் முன்பாகவே, அமெரிக்கா Nord Stream எரிவாயுக் குழாய் திட்டத்திற்கெதிராக போராடி வந்தது, அது அவர்களுடைய கொள்கையின் ஒரு பகுதியாகவே உள்ளது என்று கூறியுள்ளார் Philippot.

அத்துடன், 2022 பிப்ரவரி மாத துவக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்க மக்கள் நினைத்தால் அந்த எரிவாயுக் குழாய்களை இல்லாமல் செய்துவிடமுடியும் என்று கூறியிருந்தார் என்று கூறும் Philippot, அதுதான் இப்போது நடந்துள்ளது, அதுதான் அமெரிக்கர்களின் விருப்பம் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்கா மீது பிரான்ஸ் தரப்பிலிருந்து வைக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version