Site icon Tamil News

பிரான்ஸில் தீடீரென தீப்பிடித்து எரிந்த பயணிகள் பேருந்து – தவிர்க்கப்பட்ட உயிர்ச்சேதம்

பிரான்ஸில் பயணிகள் பேருந்து ஒன்று நடுவழியில் தீடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

சுற்றுவற்ற வீதியில் உள்ள porte de Clignancourt பகுதியில் இச்சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.

பயணிகள் எவருமின்றி தனியே சாரதியுடன் பயணித்த குறித்த பேருந்து நடுவழியில் திடீரென தீப்பிடித்துள்ளது.

பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

RATP நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த பேருந்தினை MAN எனும் நிறுவனம் தயாரித்திருந்தது. இது ஒரு மின்சார பேருந்து எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு படையினர் தலையிட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

 

Exit mobile version