Site icon Tamil News

இலங்கையில் புதிதாக கையடக்க தொலைப்பேசிகளை கொள்வனவு செய்யவுள்ளவர்களுக்கான செய்தி : புதிய விலை அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டு புதிய பெறுமதி சேர் வரி சீர்த்திருத்திற்கு அமைய நாளை (01.01.2024) முதல் புதிய வரி கொள்கை அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், அனைத்து வகையான கையடக்க தொலைப்பேசிகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் என  கையடக்க தொலைபேசி விற்பனை மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அந்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் “நாளை முதல் கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை கிட்டத்தட்ட 35 வீதத்தால் அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் வற் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

இந்த விலை உயர்வின் மூலம் கையடக்கத் தொலைபேசி சந்தையில் சுமார் 50 வீதம் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி நாளை முதல் 100,000 ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசி 135,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version