Site icon Tamil News

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராட்டங்கள் செய்யலாம் – ஆளுநர் செந்தில் தொண்டமான்

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராட்டங்கள் செய்யலாம். அவ்வாறான போராட்டங்கள் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கோகண்ணபுர காக்கும் அமைப்பு சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை அழித்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி காணிகளை வெளிநாட்டுக்கு விற்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்ட இனவெறியன் செந்தில் தொண்டமானுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் என்ற தலைப்பில் ஒரு இலட்சம் கையொப்பம் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு. இன்று (19) திருகோணமலையில் இடம்பெற்று வருகிறது.

இவ்விடயம் தொடர்பாக ஆளுநரிடம் ஊடகவியலாளரொருவர் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கும் போது இது ஒரு ஜனநாயக நாடு யாரினாலும் என்ன மாதிரியான போராட்டக்களும் செய்யலாம். போராட்டங்கள் ஜனநாயக முறையில் நாட்டின் சட்டங்களுக்கு ஏற்ற விதத்தில் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version