Site icon Tamil News

ஜூலையில் வெளியாகும் புதிய இணைய தொடர் ‘ஸ்வீட் காரம் கோப்பி’

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் புதிய இணைய தொடர்களுக்கு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது.

‘சுழல்’, ‘வதந்தி’ , ‘ மொடர்ன் லவ் -சென்னை’ ஆகிய அசல் இணைய தொடர்களை வழங்கிய அமேசான் பிரைம் வீடியோவில் ஜூலை மாதம் ஆறாம் திகதி முதல் ‘ஸ்வீட் காரம் கோப்பி’ எனும் புதிய இணைய தொடர் வெளியாகிறது.

இயக்குநர்கள் பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, சுவாதி ரகுராமன் ஆகியோர் இயக்கத்தில் எட்டு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த தொடரில் மூத்த நடிகை லட்சுமி, மது, சாந்தி ஆகிய மூன்று நடிகைகள் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் எனும் பட நிறுவனத்தின் சார்பில் ரேஷ்மா கட்டலா உருவாக்கி இருக்கும் இந்த இணைய தொடர் ஜூலை 6ஆம் திகதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இந்த இணைய தொடர், மூன்று பெண்மணிகள்- அவர்களின் வாழ்வியலில் மேற்கொண்ட மறக்க இயலாத பயணத்தை அழகாக விவரிக்கிறது. வெவ்வேறு தலைமுறையை சார்ந்த மூன்று பெண்மணிகள்- வாழ்க்கையின் மீதான தங்களின் அன்பு, தன்னம்பிக்கை மற்றும் அவர்கள் சுயமாக கண்டுபிடித்த விடயங்களை மையப்படுத்தி இந்த தொடர் எட்டு அத்தியாயங்களாக உருவாகி இருக்கிறது.

 

Exit mobile version