Site icon Tamil News

அமெரிக்கவில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் துப்பாக்கிக்கு தடை!

துப்பாக்கி வன்முறையை தவிர்க்க நியூ மெக்சிகோ மாகாண கவர்னர் புதிதாக நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 6 திகதி அங்குள்ள அல்புகெர்கி பகுதியின் கூடைப்பந்து மைதானத்துக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 வயது சிறுவன் உயிரிழந்தான்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இதுபோன்ற துப்பாக்கி வன்முறையை தவிர்க்க நியூ மெக்சிகோ மாகாண கவர்னர் புதிதாக நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அதில் நியூ மெக்சிகோ மாகாணத்துக்குட்பட்ட பகுதிகளில் அடுத்த 30 நாட்களுக்கு துப்பாக்கிகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

அதன்பிறகு மீண்டும் இந்த உத்தரவு நீட்டிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் சட்ட போராட்டத்தை சந்திக்க தான் தயார் எனவும் அவர் அங்குள்ள நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version