Site icon Tamil News

எம்.சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட நகர்த்தல் மனு: மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றினால் நிராகரிப்பு

மட்டு கச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட நகர்த்தல் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தின் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து 4 பேரை விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம். சுமந்திரன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வெள்ளிக்கிழமை (17) கொண்டுவந்த நகர்த்தல் மனு விண்ணப்பத்தை நீதவான் நிராகரித்தார்.

கடந்த மாச் மாதம் 30 ம்திகதி மட்டக்களப்பு கச்சேரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தின் போது மயிலத்தமடு மேச்சல் தலை பண்ணையாளர்கள் கச்சேரிக்கு முன்பால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு கடமைக்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை அவர்களது கடமையை செய்யவிடாமை மற்றும் சட்டவிரோத ஒன்று கூடல் நிகழ்வில் உறுப்பினராக இருந்த குற்றச்சாட்டின் பேரில் 12 பேருக்கு எதிராக பொலிசார் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்தனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (17) ஜனாதிபதி சட்டத்தரணி ஏம்.சுமந்திரன் இந்த வழக்கில் 3ம், 4ம், 8ம், 9ம் சந்தேக நபர்கள் தங்களது உரிமை தொடர்பாக ஒன்று கூடியதாகவும் அவர்களுடன் நா.உறுப்பினர்களை பொலிசார் உட்செல்ல அனுமதித்ததாகவும் பின்னரே பொலிசார் வேண்டு மென்று வழக்கு தாக்குதல் செய்துள்ளதாகவும் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரி நகர்த்தல் முன விண்ணப்பம் ஒன்றை மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றப் போல் முன்னிலையில் திறந்த மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

இந்த நகர்தல் மனு விண்ணப்பம் தொடர்பாக நீதவான் விசாரணையின் போது வழக்கு தாக்குதல் செய்த பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக அங்கு பெறப்பட்ட ஒளிபதிவு மூலமாக 12 சந்தேக நபர்களை இனங்கண்டு அவர்களை மன்றினூடாக அழைப்பானை நிறைவேற்றப்பட்டது

ஆனாலும் அவர்கள் இதுவரை பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலங்கள் கெடுக்கப்படாத காரணத்தால் விசாரணை முடிவுறாத காரணத்தை முன்வைத்ததையடுத்து சட்டத்தரணி சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட முன் நகர்த்தல் மனு விண்ணப்பத்தை நீதவான் நிராகரித்தார்.

Exit mobile version