Site icon Tamil News

இலங்கையில் மகளுக்கு தாய் செய்த கொடூரம்

மினுவாங்கொடையில் 14 வயது சிறுமியை பணத்துக்காக பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் அதுல குணசேகர உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, 43 வயதான சிறுமியின் தாயாரும், 52 மற்றும் 42 வயதுகளை மதிக்கத்தக்க இரண்டு சந்தேகநபர்களுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சந்தேகநபர்கள் மூவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி அதன் அறிக்கையை எதிர்வரும் 22ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், சிறுமியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்துக்கு அமைய மேலும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version