Site icon Tamil News

இலங்கை வானிலையில், மாற்றம் : மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள்,  தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இலங்கை மற்றும் தென் தமிழக பகுதிகளில் இன்று (27.06) முதல் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரை ஏற்படக்கூடி காலநிலை மாற்றங்கள் தொடர்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையின் கடலோர பகுதிகளில்,  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக கடற்றொழிலாளர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version