Site icon Tamil News

இலங்கையின் பாடசாலைகளுக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிபர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன!

அதிபர் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில்,  4,718 அதிபர் நியமனங்களை நவம்பர் மாத தொடக்கத்தில் பள்ளிகளுக்கு வழங்க உள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

முல்லைத்தீவு மல்லாவி நடுநிலைப் பாடசாலையில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சியில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  அமைச்சர், ஆசிரியர் ஆலோசகர் சேவையில் உள்ள முரண்பாடுகளை நீக்கி ஆசிரியர் கல்விச் சேவையில் 705 வெற்றிடங்களும் கல்வி நிர்வாக சேவையில் 405 வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் முழு கல்வி முறையின் மனித வள குறைபாடுகள் படிப்படியாக பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், கல்வி மாற்றத்தில் கட்டமைப்பு மாற்றங்களுக்கு ஏற்ப அனைவரும் மாற்றியமைக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version