Site icon Tamil News

சீனாவை எதிர்கொள்ள நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் அவுஸ்ரேலியா!

சீனாவை எதிர்கொள்வதற்காக அவுஸ்திரேலியா நீண்ட தூர ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ளது.

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு நிலை குறித்து  மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளது.

ஏவுகணை யுகத்தில் அவுஸ்திரேலியா புவியியல் ரீதியிலான தனிமைப்படுத்தல் மூலம் தன்னை பாதுகாக்க முடியாது என ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

110 அறிக்கையை இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பாரிய மாற்றம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் உலகபோருக்கு பின்னர் எந்த நாட்டிலும் காணப்படாத அளவிற்கு சீனாவின் இராணுவகட்டமைப்பு இப்போது மிகப்பெரியதாக உள்ளது என தெரிவித்துள்ள ஆய்வறிக்கை இந்த இராணுவ கட்டமைப்பு வளர்ச்சி என்பதை தனது மூலோபாய நோக்கம் குறித்து இந்தோ பசுபிக் பிராந்தியத்திற்கு எந்தவித உத்தரவாதத்தையும் வழங்காமல் சீனா முன்னெடுக்கின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வை அடிப்படையாக வைத்து அவுஸ்திரேலிய பாதுகாப்பு படையினர் தரையை அடிப்படையாக கொண்ட ஆயுதங்களில் இருந்து நீண்டதூர ஏவுகணைகளை நோக்கி கவனத்தை செலுத்துவார்கள் என பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கான வெடிபொருட்கள் அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

500 கிலோமீற்றர் செல்லக்கூடிய துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை கொள்வனவு செய்து இராணுவத்திற்கு வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version