Site icon Tamil News

இலங்கையில் முதன்முறையாக ஆளில்லா விமானத்தை இயக்கும் பயிற்சி வகுப்பு

இலங்கையில் முதன்முறையாக ஆளில்லா விமானத்தை இயக்கும் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் விவசாயத் துறை திறன்கள் பேரவை மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் தலைமையில் இயங்கும் விவசாய தொழில்நுட்ப விரிவாக்க மையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் விவசாயத் துறையில் விரைவான அபிவிருத்தியை எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பயிற்சி பெற்ற மனித வளப் பற்றாக்குறைக்கு தீர்வாக, நிபுணத்துவ துறையில் உள்ள இடர்பாடுகளைக் கடந்து, களைய வேண்டிய, வினைத்திறனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் வழங்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நமது நாடும், தற்போதைய உலகம் கடந்து வரும் நான்காவது தொழில் புரட்சியை துரித தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடைந்து கொண்டு தொடர முடியும் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version