Site icon Tamil News

இலங்கையில் இலஞ்ச ஊழல் தொடர்பில் 2000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!

இலங்கையில் இந்த  வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 2,142 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி , இலஞ்ச குற்றச்சாட்டு தொடர்பில் 158 முறைப்பாடுகளும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 379 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.

அத்துடன்,  சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்த்தமை தொடர்பில் 79 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இலஞ்சம் மற்றும்  ஊழல் தொடர்பில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 8 பேர் பொலிஸ் அதிகாரிகள் ஆவர்.

மேலும், இலஞ்சம் வாங்கியமை தொடர்பில் 25 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version