Site icon Tamil News

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பின் அளவு 3 பில்லியன் டொலர்களை கடந்துள்ளது!

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பின் அளவு 3 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதில் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமான, சீனாவின் மக்கள் வங்கியின் இடமாற்று வசதியும்  உள்ளடகப்பட்டுள்ளது.

உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் இருந்து கணிசமான அளவு அந்நியச் செலாவணியை உள்வாங்கியுள்ளதாக மத்திய வங்கி கூறியது, இதன் விளைவாக மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

குறுகிய கால அரசாங்கப் பத்திரங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பமும் சமீபத்திய மாதங்களில் அந்நிய செலாவணி பணப்புழக்கத்தை மேம்படுத்த உதவியது என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Exit mobile version