Site icon Tamil News

மரணதண்டனை விதிக்கப்பட்ட வியட்னாமிய பெருஞ்செல்வந்தர் மீது மேலும் பல மோசடிக் குற்றச்சாட்டுகள்

மரணதண்டனை விதிக்கப்பட்ட வியட்னாமியப் பெருஞ்செல்வந்தர் மீது மேலும் பல மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட இருக்கின்றன.இந்தத் தகவலை வியட்னாமிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் செப்டம்பர் 6ஆம் திகதியன்று தெரிவித்தது.

மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது ஆகியவை தொடர்பாக அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

வியட்னாமில் உள்ள பிரதான சொத்து மேம்பாட்டு நிறுவனமான வேன் தின் ஃபாட்டின் தலைவரான டுரோங் மை லானுக்கு ஏற்கெனவே மரணதண்டனை விதிக்கப்பட்டுவிட்டது,

27 பில்லியன் அமெரிக்க டொலர் (S$35 பில்லியன்) மதிக்கத்தக்க மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.இது வியட்னாமில் பதிவாகியுள்ள ஆக மோசமான ஊழல் குற்றங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், செப்டம்பர் 19ஆம் திகதியிலிருந்து லானுக்கு எதிராகவும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் 33 பேருக்கு எதிராகவும் வழக்கு விசாரணை நடத்தப்படும்.இந்த வழக்கில் ஏறத்தாழ 360,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version