Tamil News

காணாமல் போன டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் கண்டுப்பிடிப்பு?

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலான டைட்டனின் உடையது என நம்பப்படும் பாகங்கள் கண்டுப்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

தேடுதல் நடவடிக்கையின் போது, நீருக்கடியில் டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளுக்கு அருகில் இந்த பாகங்களை கண்டுபிடித்ததாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள ஆக்சிஜன் தீர்ந்துவிடுவதற்குள் கப்பலைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுக்கள் விரைந்து செயற்பட்டு வரும் நிலையில், தேடும் பணி இப்போது முக்கியமான கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.5 மீற்றர் (21 அடி) நீளமான டைட்டன் எனப் பெயரிடப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழ‍மை அதிகாலை அத்திலாந்திக் சமுத்திரத்துக்குள் இறங்க ஆரம்பித்து 2 மணத்தியாலங்களில் அதன் தாய்க்கப்பலுடனான ‍ தொடர்பை இழந்தது.

அத்திலாந்திக் சமுத்திரத்தில் 7600 சதுரமைல் பரப்பளவுள்ள பகுதியில் அமெரிக்க. கனேடிய கரையோர காவல்படை கப்பல்கள் தேடுதல் மேற்கொண்டுவந்தன.

தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் அமெரிக்க கடற்படை நிபுணர்களும் ஈடுபட ஆரம்பித்தனர்.

 

Exit mobile version