Tamil News

வெள்ளைமாளிகைக்கு சென்ற மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் தலைமை அதிகாரிகள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து ஆலோசிக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சத்யா நாதெல்லா மற்றும் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட தொழில்நுட்பத்துறையினர் நேற்று வெள்ளைமாளிகைக்கு சென்றனர்.

அண்மைக்காலங்களில் செயற்கை நுண்ணறிவு மூலமாக அழிவுசக்திகள் தலைதூக்கியிருக்கும் நிலையில் அவற்றை ஒழுங்குமுறைப்படுத்தவும் அரசு அதிகாரத்தில் கட்டுப்படுத்தவும் ஜோ பைடன் நிர்வாகம் தொழில்நுட்பத் துறை வல்லுனர்களை, வெள்ளை மாளிகைக்கு அழைத்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் தலைமையில் அவசர ஆலோசனை நடத்தியது.

வெள்ளைமாளிகைக்கு சென்ற மைக்ரோசாப்ட் நாதெல்லா மற்றும் கூகுள் சுந்தர் பிச்சை; எதற்க்காக தெரியுமா? | Microsoft Nadella Google Sundar Pichai White House

இந்நிலையில் எந்த ஒரு புதிய செயற்கை நுண்ணறி செயலியை வெளியிடும் முன்பாக அதன் பாதுகாப்பு அம்சத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. நம்பகத்தன்மை மிக்க செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டுக்காக அமெரிக்கா 140 மில்லியன் டொலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

இத்தொகை மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் செய்த முதலீட்டை ஒப்பிட்டால் மிகவும் குறைவானதுதான். சென்னையைச் சேர்ந்த சேதுராமன் பஞ்சநாதன் தலைமையிலான நேஷனல் சைன்ஸ் பவுண்டேஷன் மூலமாக புதிதாக 7 செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையங்களை அமைக்கவும் இத்தொகை பயன்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.

Exit mobile version