Site icon Tamil News

மெக்ஸிகோவில் வெள்ளை சோள இறக்குமதிக்கு வரி விதிப்பு!

மெக்ஸிகோ வெள்ளை சோள இறக்குமதிக்கு 50 வீதம் வரி விதித்துள்ளது.

இதன்மூலம்  தேசிய உற்பத்தியை அதிகரிக்கவும், மரபணு மாற்றப்பட்ட சோளத்தின் இறக்குமதியைத் தடுக்கவும் முடியும் என அந்நாட்டின்  ஜனாதிபதி கூறியுள்ளார்.

மெக்சிகன் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அரசிதழில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில்  இந்த வரிவிதிப்பானது இந்த ஆண்டின் இறுதி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்  மெக்ஸிகோவிற்றும், கனடா மற்றும் அமெரிக்கா இடையில் மரபணு மாற்றப்பட்ட சோளம் தொடர்பாக வர்த்தக சர்ச்சை நிழவுகின்ற நிலையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

மெக்சிகன் அரசாங்கம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட அடிப்படை உணவுகளில் வெள்ளை சோளத்தையும் உள்வாங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version