Site icon Tamil News

மம்மூட்டியின் பேய் படம்.. பிரம்மயுகம் டீசர் வெளியானது…

நடிகர் மம்மூட்டி செம ஸ்பீடாக படங்களை வெளியிடுகின்றார். கடந்த நவம்பர் மாதம் தான் ஜோதிகா மற்றும் மம்மூட்டி நடித்த காதல் தி கோர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் ஓடிடியில் வெளியான அந்த படத்துக்கு பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

இந்நிலையில், அடுத்து பேய் படமாக உருவாகி உள்ள பிரம்மயுகம் படத்தின் டீசரை தற்போது வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு பொங்கல் ட்ரீட் கொடுத்திருக்கிறார் மம்மூட்டி.

பிரம்மயுகம் படத்தை விக்ரம் வேதா படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் 2021ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி வெளியான பூதக்காலம் படத்தில் ரேவதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஹாரர் த்ரில்லர் படமாக வெளியான அந்த படத்திற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. இந்நிலையில், அந்த இயக்குநர் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள மற்றொரு ஹாரர் த்ரில்லர் படமாக பிரம்மயுகம் உருவாகி உள்ளது.

Exit mobile version