Tamil News

ஓஸ்கர் வென்ற பிரபல பொலிவுட் நடிகர் காலமானார்: சோகத்தில் திரையுலகம்

பொலிவுட் நடிகர் ஆலன் அர்கின் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.

பிரபல நடிகர் ஆலன் ஆர்கின் 2006 ஆம் ஆண்டு லிட்டில் மிஸ் சன்ஷைன் திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.

அதுமட்டுமல்லாமல், 1963ல் ‘என்டர் லோபிங்’ படத்திற்காக டோனி விருதை வென்றார்.

தொடர்ந்து, 1968ல் ‘லிட்டில் மர்டர்ஸ்’ படத்தை இயக்கியதற்காக டிராமா டெஸ்க் விருதை வென்றார்.

சமீபத்தில், Netflix OTT தளத்தில் வெளியான ‘The Kominsky Method’ என்ற வெப் தொடரில் அவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதற்காக ஆலன் ஆர்கின் எம்மி, கோல்டன் மற்றும் எஸ்ஏஜி போன்ற விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக 89 வயதான அலன் ஆர்கின் காலமானார். அவரது மரணத்தை அவரது மகன்கள் ஆடம், மேத்யூ மற்றும் அந்தோனி உறுதிப்படுத்தினர்.

பன்முகத்தன்மைக் கொண்ட ஆலன் ஆர்கின் மறைந்த செய்தி திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version