Tamil News

முதல் நாள் வசூலில் படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கானின் துன்கி!

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘துன்கி’ திரைப்படம் முதல் நாளில் ரூ.30 கோடி மட்டுமே வசூல் ஈட்டியுள்ளது. இது ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டில் இதற்கு முன்பு வெளியான ‘ஜவான்’, ‘பதான்’ படங்களின் முதல் நாள் வசூலை விட குறைவாகும்.

ஷாருக்கான் நடிப்பில் ‘துன்கி’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் முதல் நாளில் ரூ.30 கோடி மட்டுமே கல்லாக்கட்டியுள்ளது.

இது இந்த ஆண்டில் வெளியான ‘ஜவான்’, ‘அனிமல்’, ‘பதான்’, ‘டைகர்-3’, ‘கடார்-2’, ‘ஆதிபுருஷ்’ படங்களின் முதல் நாள் வசூல் வரிசையில் 7வது இடமாகும். ஷாருக்கானின் ஹிட் படமான ‘ஜவான்’ முதல் நாளில் ரூ.75 கோடியும், எதிர்பார்த்த வெற்றியைத் தராத ‘ஆதிபுருஷ்’ முதல் நாளில் ரூ.36 கோடியும் வசூலித்துள்ளன.

Dunki Box Office Collection Day 1: Shah Rukh Khan, Vicky Kaushal Film Posts  Healthy Total, Earns Rs 30 Crore | Hindi News, Times Now

ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த ‘பதான்’ திரைப்படம் முதல் நாளில் ரூ.57 கோடி வசூலித்தது.

‘ஜவான்’, ‘பதான்’ ஆகிய இரண்டு படங்களும் ஒட்டுமொத்தமாக ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தன. அவற்றுடன் ஒப்பிடுகையில், ‘துன்கி’ படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் குறைந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இருப்பினும் நாளை முதல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை தினங்கள் வர உள்ளதால், வரும் நாள்களில் ’துன்கி’ படத்துக்கு வசூல் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version