Site icon Tamil News

நஷ்டத்தில் இயங்கும் உள்ளூர் வானொலி நிலையங்கள் மூடப்படுகின்றன

நஷ்டத்தில் இயங்கும் பொது நிறுவனங்களை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ், இம்மாதம் 31ஆம் திகதிக்குப் பிறகு, தேசிய வானொலி அலைவரிசைகளில் அதிக நஷ்டம் ஏற்படும் அனைத்து பிராந்திய வானொலி சேவைகளையும், தொடர்புடைய அலைவரிசைகளில் கூட்டாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து பிராந்திய வானொலி சேவைகளையும் தேசிய வானொலிகளுடன் தொடர்புடைய அலைவரிசைகளுடன் இணைக்குமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் பணிப்பாளர் (பிராந்திய சேவைகள்/ அபிவிருத்தி) மற்றும் அனைத்து வானொலி பிராந்திய சேவைகளின் அனைத்து உதவிப் பணிப்பாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சுற்றறிக்கை ஒன்றின் மூலம் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அன்றைய தினம் வானொலி கூட்டுத்தாபனத்தின் அனைத்து பிராந்திய சேவைகளும் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ருஹுணு, ரஜரட்டை, கந்துரட்ட பிராந்திய வானொலி சேவைகள் சிங்கள சுதேசி சேவை, யாழ் பிராந்திய வானொலி சேவை மற்றும் பிற வானொளி சேவையை தமிழ் சுதேசி சேவையுடன் இணைக்க வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பிராந்திய வானொலி சேவைகளான வடமேற்கு மற்றும் தம்பனை வானொலி தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேற்படி சுற்றறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

எவ்வாறாயினும், இந்த சேவைகள் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக வானொலி கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானொலி இலங்கை ஆங்கில அலைவரிசையானது 97.4/97.6 அலைவரிசைகளில் நாடு தழுவிய சேவையாக தொடர்ந்தும் பேணப்படும் என சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version