Site icon Tamil News

பிலிப்பைன்ஸில் வெளிநாட்டு சுற்றுலாபயணிகளைக் குறிவைத்த கடத்தல் கும்பல் கைது

பிலிப்பைன்சில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சீன, மலேசிய சுற்றுப்பயணிகளைக் குறிவைத்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை பிலிப்பைன்ஸ் உள்துறை அமைச்சர் பென்ஹர் அபாலோஸ், ஜூன் 5ஆம் திகதியன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின் முன் நிறுத்தினார்.

சந்தேக நபர்களில் உளவுப் பிரிவு உயர் அதிகாரியான மேஜர் கிறிஸ்டெல் கார்லோ வில்லானுயேவாவும் ஒருவர். மற்றவர்கள் சார்ஜெண்ட் பதவி வகிப்பவர்கள்.

கடத்தல் கும்பலில் குறைந்தது 14 பேர் இருப்பதாக நம்பப்படுகிறது.அவர்களில் சீனாவைச் சேர்ந்த ஒருவரும் மலேசியர் ஒருவரும் அடங்குவர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஜூன் 2ஆம் திகதியன்று சீனாவைச் சேர்ந்த மூன்று ஆண்களும் ஒரு மலேசியரும் கடத்தப்பட்டனர்.அதற்கு இந்தக் கும்பல்தான் காரணம் என்று நம்பப்படுகிறது.

Exit mobile version