Site icon Tamil News

இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ..

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா-கனடா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அவரது கொலையில் விசாரணை மற்றும் நீதி வழங்கப்படுவதற்கு கனடாவுடன் இணைந்து செயல்படுமாறு இந்தியாவுக்கு அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்த விஷயத்தை இந்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் முழு வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தவும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்தவும் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’ என கூறினார்.

இந்தியாவின் விசா ரத்து நடவடிக்கை குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கும்போது, ‘நாம் சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடு. கனடிய குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், நமது மதிப்புகள் மற்றும் சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை நிலைநிறுத்தவும் தேவையான பணிகளை நாங்கள் தொடர்ந்து செய்வோம். இப்போது எங்கள் கவனம் அதுதான்’ என்றும் கூறினார்.

Exit mobile version