Site icon Tamil News

ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக ஒன்றிணையுமாறு இத்தாலி பிரதமர் அழைப்பு!

ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அழைப்பு விடுத்துள்ளார்.

ரோமில் இன்று (23.07) நடந்த சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,  “ஐரோப்பா மற்றும் இத்தாலிக்கு குடியேற்றம் தேவைப்படுபவர்களுக்கு சட்டப்பூர்வ வழிகள் திறந்திருப்பதாக தெரிவித்தார்.

“திரளான சட்டவிரோத குடியேற்றம் நம் ஒவ்வொருவருக்கும் தீங்கு விளைவிக்கிறது எனவும் மிகவும் பலவீனமானவர்களின் செலவில் பணக்காரர்களாகும் குழுக்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2023 முதல் 2025 வரை ஐரோப்பிய ஒன்றியம் அல்லாதவர்களுக்கு 452,000 புதிய வேலை விசாக்களை வழங்க இத்தாலி உறுதியளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version