Site icon Tamil News

புலம்பெயர்ந்தோர் கடத்தல் வழக்கு விசாரணையில் இத்தாலி துணைப் பிரதமர்

இத்தாலிய துணைப் பிரதம மந்திரி மேட்டியோ சால்வினி, 2019 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்தோர் ஒரு NGO கப்பலில் இருந்து இறங்குவதைத் தடுத்ததற்காக கடத்தல் மற்றும் கடமை தவறிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

இந்நிலையில் சிசிலியில் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, ​​சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான தனது கடுமையான அணுகுமுறையை ஆதரித்தார்.

குற்றச்சாட்டை மறுத்த அவர், “தேசிய பாதுகாப்பின் நலனுக்காக” செயல்பட்டதாகக் கூறினார்.

அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்னதாக, சல்வினி X பதிவில் “நான் செய்ததை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version