Tamil News

சிரியா- ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்… தளபதி உட்பட 11 பேர் உயிரிழப்பு!

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் தூதரக கட்டிடம் முழுமையாக சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் அதிலிருந்த முக்கிய தளபதி உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சி குழுவும் இஸ்ரேல் நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவில் இருந்தும் ஈரான் ஆதரவு பெற்ற குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது.இதனால் இஸ்ரேல் அருகில் உள்ள லெபனான், சிரியா, ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் குழுக்களை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் தூதரகம் பலத்த சேதம் அடைந்துள்ளது.

Iran says Israel bombs its embassy in Syria, kills commanders

இந்த தாக்குதலின்போது தூதரகத்தில் இருந்த இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் முகமது ரீசா ஜஹேதி என்பவர் லெபனானில் குவாத்தை படையை வழிநடத்திச் சென்ற முக்கிய தளபதி ஆவார். 2016 வரை சிரியாவில் பணியாற்றியுள்ளார்.இவருடன் துணை தளபதி முகமது ஹதி ஹஜ்ரியாஹிமி-யும் கொல்லப்பட்டுள்ளார். அத்துடன் 5 அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர். ஈரான் தளபதி உடன் ஹிஸ்மில்லா உறுப்பினர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். தூதரக பாதுகாப்பில் இருந்த இரண்டு பொலிஸார் காயம் அடைந்துள்ளனர்.

தூதரகத்தின் முக்கிய கட்டிடம் தாக்கப்படவில்லை. அதில் ஈரான் தூதரக அதிகாரிகளின் வீடுகள் உள்ளன. அங்கு தாக்குதல் நடைபெற்றிருந்தால் உயிரிழப்பு மிகவும் அதிகரித்திருக்கும். இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தூதர் ஹொசைன் அக்பாரி தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் நாசர் கனாணி மற்ற நாடுகள் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரானிலிருந்து தெற்கு இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேல் நோக்கி ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் நடத்தியது என்று தெரிவித்துள்ளார்

Exit mobile version