Site icon Tamil News

காஸாவின் முக்கிய நகரம் ஒன்றில் மூர்க்கமாகத் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்

தென் காஸாவின் முக்கிய நகரான கான் யூனிஸ் நகரில் போர் தீவிரமடைந்துள்ளது.

இஸ்ரேலியப் படையினர் மூர்க்கமாகத் தாக்குதல் நடத்திவருகின்றனர். நகர வான்வெளி புகை மூட்டத்தால் நிரம்பியிருக்கிறது.

காஸாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோர் அங்கேதான் உள்ளனர்.

ஹமாஸ் உறுப்பினர்கள் சிலர் சரணடைந்துவிட்டதாக இஸ்ரேல் கூறியது. இன்னும் அதிகமானோர் சரணடைய வேண்டும் அது ஊக்குவித்தது.

ஆனால் ஹமாஸ் உறுப்பினர்கள் சரணடைந்ததற்கான எந்த ஆதாரத்தையும் இஸ்ரேலியத் தற்காப்புப் படை வெளியிடவில்லை. தனது குழுவினர் சரணடைந்ததாகச் சொல்லும் இஸ்ரேலின் கூற்றை ஹமாஸ் நிராகரித்தது.

இதற்கிடையே ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள நாசர் மருத்துவமனைக்குத் தொடர்ந்து பெருமளவு மக்கள் சிகிச்சை நாடிச் செல்கின்றனர்.

அங்கு 1,000 பேருக்கு மட்டுமே சிகிச்சையளிக்க வசதி உள்ளது. ஆனால், தற்போது அங்கு சுமார் 3,500 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

 

Exit mobile version