Site icon Tamil News

அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி சர்ச்சை – இலங்கையர்களுக்கு பாதிப்பா?

கொரோனா காலப் பகுதியில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அந்த தடுப்பூசியை உற்பத்தி செய்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டன. இந்த விடயத்தை குறித்த ஏற்கனவே நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

இந்த நோய் அறிகுறிகள் எதிர்காலத்தில் பாதிப்பை  ஏற்படுத்தாது எனவும், தடுப்பூசி செலுத்தியவுடனேயே ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியினால் பாதிப்புகள் ஏற்படாது என அவர் கூறியுள்ளார்.

Exit mobile version